‘லியோ’வை அடுத்து ‘ஜவானு’க்கு வருகிறார் சஞ்சய் தத்

‘லியோ’வை அடுத்து ‘ஜவானு’க்கு வருகிறார் சஞ்சய் தத்
Updated on
1 min read

ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதை ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்க, அல்லு அர்ஜுனிடம் இயக்குநர் அட்லீ பேசினார். அவர் மறுத்துவிட்டதால் ராம்சரணிடம் பேசியிருப்பதாகக் கூறப்பட்டது.

இப்போது சஞ்சய் தத், அந்த வேடத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. தற்போது விஜய்யின் ‘லியோ’ படத்தில் நடித்து வரும் சஞ்சய் தத், அடுத்து ‘ஜவான்’ படத்தில் நடிக்க இருக்கிறார். ஷாருக்கான், சஞ்சய் தத் நடிக்கும் காட்சிகளுக்காக மும்பையில் செட் அமைக்கப்பட இருக்கிறது. சஞ்சய் தத், ஏற்கெனவே ஷாருக்கானின் ரா.ஒன், ஓம் சாந்தி ஓம் படங்களில் கவுரவ வேடங்களில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in