உருவாகிறது மிருணாள் சென் பயோபிக்

உருவாகிறது மிருணாள் சென் பயோபிக்
Updated on
1 min read

இந்திய சினிமாவின் முக்கிய திரைப்பட இயக்குநர்களில் ஒருவர் மிருணாள் சென். வங்கமொழி, இந்தி, தெலுங்கு திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், பத்மபூஷன், தாதா சாகேப் பால்கே உட்பட பல விருதுகளைப் பெற்றவர்.

பல்வேறு நாட்டு திரைப்பட விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் இயக்கி 1969ல் வெளியான ‘புவன் ஷோம்’ (திரு.ஷோம்) படம் இவரை முக்கியமான இயக்குநராக அடையாளப்படுத்தியது. நவீன இந்திய திரைப்பட இயக்கத்தின் அடையாளமாக இந்தப் படம் கருதப்படுகிறது.

கடந்த 2018ம் ஆண்டு மறைந்த இவர் வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாகிறது. சிரிஜித் முகர்ஜி இயக்கும் இந்தப் படத்தில் வங்கதேச நடிகர் சஞ்சால் சவுத்ரி, மிருணாள் சென்னாக நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்குகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in