‘கைதி’ படத்துக்கு நியாயம் சேர்க்கிறதா அஜய் தேவ்கனின் ‘போலா’? - இந்தி ரீமேக் டீசர் வெளியீடு

‘கைதி’ படத்துக்கு நியாயம் சேர்க்கிறதா அஜய் தேவ்கனின் ‘போலா’? - இந்தி ரீமேக் டீசர் வெளியீடு
Updated on
1 min read

லோகேஷ் கனகராஜின் ‘கைதி’ படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக்காகியுள்ளது. தற்போது அதன் டீசர் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

கடந்த 2019-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான படம் ‘கைதி’. வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைத்திருந்தார். ரூ.25 கோடி பட்ஜெட்டில் உருவான படம் ரூ.100 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படம் இந்தியில் ‘போலா’ என்ற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது. இதனை பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் இயக்கியுள்ளார். மேலும், அவரே நடித்தும் தயாரித்தும் இருக்கும் இப்படம் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ளது. நாயகியாக தபு நடித்துள்ள இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

டீசர் எப்படி? - மொத்தம் 1.26 நிமிடம் ஓடும் இந்த டீசர் ‘கைதி’ படத்துக்கு நியாயம் சேர்க்கவில்லையோ என சந்தேகிக்கும் வகையில் உள்ளது. அழுத்தமான கதையும், விறுவிறுப்பான திரைக்கதையும் கொண்டது ‘கைதி’. இந்த டீசரின் இறுதிக் காட்சியில் வரும் சூலம் கொண்டு காரை குத்துவதும் பறப்பதும் துருத்தி நிற்கிறது. டீசர் வீடியோ:

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in