உலக அளவில் ரூ.50 கோடி வசூலித்த ஆமீர்கானின் லால் சிங் சத்தா 

உலக அளவில் ரூ.50 கோடி வசூலித்த ஆமீர்கானின் லால் சிங் சத்தா 
Updated on
1 min read

ஆமீர்கான் நடிப்பில் வெளியான 'லால் சிங் சத்தா' திரைப்படம் உலக அளவில் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்வைத் சந்தன் இயக்கத்தில் ஆமீர்கான் நடித்துள்ள படம் 'லால் சிங் சத்தா'. 'ஃபாரஸ்ட் கம்ப்' ஹாலிவுட் படத்தின் அதிகாரபூர்வ மறு ஆக்கமான இந்தப் படத்தில் கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தமிழகத்தில் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெய்ண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், வியாழக்கிழமை வெளியான இந்தப் படம் முதல் நாள் வசூலாக 11.70 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகின. கடந்த 13 ஆண்டுகளில் ஆமீர்கானின் படத்துக்கு கிடைத்த மோசமான ஓப்பனிங் இது என்றும் பாலிவுட் வர்த்தக நிபுணர்களால் கருதப்பட்டது.

இரண்டாம் நாளான வெள்ளிக்கிழமையன்று படம் ரூ.7.26 கோடி வசூலித்துள்ளது. இரண்டு நாட்களில் ரூ.18.96 கோடியை படம் ஈட்டியிருக்கிறது. 'லால் சிங் சத்தா'வின் இரண்டாம் நாள் வசூல், முதல் நாளை ஒப்பிடுகையில் 20% குறைந்துள்ளது. மூன்றாம் நாளான சனிக்கிழமை படம் ரூ.8.75 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்தியாவில் மட்டும் படம் மூன்று நாட்களில் ரூ.27.84 கோடியை வசூலித்துள்ளது. உலக அளவில் பார்க்கும்போது ரூ.51.37 கோடியை 'லால் சிங் சத்தா' வசூலித்துள்ளது. விடுமுறை நாளான இன்று வசூல் எண்ணிக்கை கூடலாம் எனக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in