

ஆமீர்கான் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகியுள்ள 'லால் சிங் சத்தா' திரைப்படம் எப்படியிருக்கிறது என்பது குறித்து பலரும் ட்விட்டரில் தங்களின் கருத்துகளை பதிவிட்டுள்ளனர். அவர்களின் கருத்துகள் குறித்து பார்ப்போம்.
'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தை அதிகாரபூர்வமாக மறு ஆக்கம் செய்து பான் இந்தியா முறையில் எடுக்கப்பட்ட படம் தான் 'லால் சிங் சத்தா'. இந்தப் படத்தின் ஆமீர்கான், கரீனா கபூர், நாக சைதன்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. படம் குறித்து நெட்டிசன்கள், 'ஃபாரஸ்ட் கம்ப்' படத்தின் ஆன்மா குறையாமல் 'லால் சிங் சத்தா' உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
லால் சிங் சத்தா விமர்சனத்தைப் படிக்க : லால் சிங் சத்தா Review: ஒரு க்ளாசிக் படைப்பின் மண்ணுக்கேற்ற மாற்றம் மனதை வென்றதா?
ஹிமேஷ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஃபாரஸ்ட் கம்ப்' படம் சிறப்பாக ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இறுதியில் வரும் எமோஷனல் க்ளைமாக்ஸ் உங்களை கண்ணீர்விட வைக்கும். கண்டிப்பாக பாருங்கள்'' என தெரிவித்துள்ளார்.
அன்வி, ''படத்தில் லால் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியையும் மிக அழகாக நெய்து மிக அற்புதமாக காட்சிப்படுத்துகிறார். அற்புதமான திரைப்படம்'' என பதிவிட்டுள்ளார்.
அருண் சன்னி, ''மேக்கிங் நன்றாக இருந்தது, இயக்குநர் பல உணர்ச்சிகரமான காட்சிகள் மூலம் பார்வையாளர்களின் இதயங்களை தொட முயற்சித்துள்ளார்'' என பதிவிட்டுள்ளார்.
ரோஹித்,''படத்தின் முதல் பாதி சந்தேகத்திற்கு இடமின்றி நன்றாக உள்ளது. ஆனால் 2-வது பாதி படம் முற்றிலும் தட்டையானது. புதிதாக படத்தில் எதுவுமில்லை'' என பதிவிட்டுள்ளார்.
கார்த்திக் நாராயண், ''ஆமீர்கான் லால் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தார்''