8 மணி நேர வேலை விவகாரம்: தீபிகா படுகோனுக்கு கங்கனா ஆதரவு

8 மணி நேர வேலை விவகாரம்: தீபிகா படுகோனுக்கு கங்கனா ஆதரவு
Updated on
1 min read

நடிகை தீபிகா படு​கோன், சந்​தீப் ரெட்டி வாங்​கா​வின் ‘ஸ்பிரிட்’, நாக் அஸ்​வினின் ‘கல்கி 2898 ஏடி - 2’ ஆகிய படங்களில் இருந்து கடந்த ஆண்டு வில​கி​னார்.

தின​மும் 8 மணி நேர வேலை; தனது குழு​வுக்​குச் சிறப்பு வசதி​கள் ஆகிய நிபந்​தனை​களை அவர் விதித்​த​தாக​வும் அதற்கு தயாரிப்​பாளர்​கள் சம்​ம​திக்​காத​தால் வில​கிய​தாக​வும் கூறப்​பட்​டது. இதையடுத்து சினி​மா​வில் 8 மணி நேர வேலை விஷ​யம் விவாதத்தை எழுப்பி இருக்​கிறது.

இந்​நிலை​யில் தீபி​கா​வின் கோரிக்​கைக்கு நடிகை​யும் பாஜக எம்​.பி​யு​மான கங்​கனா ரனாவத் ஆதரவு தெரி​வித்​துள்​ளார். இதுபற்றி கங்​கனா கூறும்​போது, “இதை இவ்​வளவு பெரிய விஷய​மாக்க வேண்​டிய அவசி​யம் இல்​லை. ஏனென்​றால் தீபிகா படு​கோன் வந்​திருக்​கும் பின்​னணி​யை​யும், அவர் அடைந்​திருக்​கும் உயரத்​தை​யும் பார்த்​தால், அந்த இடத்​தைத் தன் உழைப்​பால் அவர் பெற்​றிருக்​கிறார் என்​பது புரி​யும்.

அவருக்கு ஒரு மகள் இருக்​கிறார். அவர் இப்​போது தாய். திரை​யுல​கின் முன்​னணி நடிகை​யாக​வும் திகழ்​கிறார். அவர் 8 மணி நேரம் மட்​டுமே பணி​யாற்ற விரும்​பி​னால், அதற்​கான தகு​தியை அவர் முழு​மை​யாகப் பெற்​றிருக்​கிறார். ஒரு நடிகை தாயான பிறகு, நீண்ட நேரம் வேலை செய்​யச் சொல்​வது கடின​மாகி​விடும்.

திரைத்​துறைக்​குப் புதி​தாக வரும்​போது, வளர்ந்து வரும் நிலை​யில் இருக்​கும்​போது, உங்​களை எளி​தில் படத்​திலிருந்து மாற்​றி​விட முடி​யும். ஆனால் தீபிகா படு​கோன் இப்​போது இருக்​கும்​ நிலை​யில்​, தயாரிப்​பாளர்​கள்​ அவரின்​ நேரத்​துக்​கு ஏற்​ப வேலையை அமைத்​துக்​ கொள்​வார்​கள்​” என்​றார்​. தீபிகா​வும்​ கங்​க​னா​வும்​ ஒரு காலத்​தில்​ மோதல்​ போக்கை கடைப்பிடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

8 மணி நேர வேலை விவகாரம்: தீபிகா படுகோனுக்கு கங்கனா ஆதரவு
Welcome to Dongmakgol: மகிழ்வூட்டும் திரை மொழியில் யுத்தமும் மனிதமும் | ஓடிடி சினிமா அலசல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in