Published : 24 Feb 2022 02:16 PM
Last Updated : 24 Feb 2022 02:16 PM

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக் - சைஃப் அலி கானின் லுக் வெளியீடு

'விக்ரம் வேதா' இந்தி ரீமேக்கில் சைஃப் அலி கானின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வரலட்சுமி சரத்குமார், கதிர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தின் இந்தி ரீமேக் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்தியிலும் 'விக்ரம் வேதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தினை ஒய் நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து தயாரித்து வருகின்றன. புஷ்கர் - காயத்ரி இயக்கி வரும் இந்தப் படத்தில் மாதவன் கதாபாத்திரத்தில் சைஃப் அலி கான், விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் ஹ்ரித்திக் ரோஷன் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷனின் வேதா லுக்கை படக்குழு வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது விக்ரம் கதாபாத்திரத்தில் நடிக்கும் சைஃப் அலி கானின் ஃபர்ஸ்ட் லுக் படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை ஹ்ரித்திக் ரோஷன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x