சோனு சூட், ஷ்ரத்தா கபூரை கவுரவித்த பீட்டா நிறுவனம்

சோனு சூட், ஷ்ரத்தா கபூரை கவுரவித்த பீட்டா நிறுவனம்
Updated on
1 min read

2020ஆம் ஆண்டின் சிறந்த சைவப் பிரியர்களாக பாலிவுட் நடிகர் சோனு சூட் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோரை பீட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

பீட்டா இந்தியா சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சைவ உணவு குறித்த பிரச்சாரத்துக்கான முன்னெடுப்பில் நடிகர் சோனு சூட் கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் சைவ உணவு பற்றிய பல்வேறு நிகழ்வுகளிலும் அவர் பங்கெடுத்துள்ளார். மேலும் தனது மகனுடன் கிரிக்கெட் ஆகும்போது காயம்பட்டு கிடந்த புறாவுக்கு உதவியதையும் கூறியிருந்தார். அதே போல நடிகை ஷ்ரத்தா ஸ்ரீநாத்தும் பல்வேறு தருணங்களில் விலங்குகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சோனு சூட் மற்றும் நடிகை ஷ்ரத்தா கபூர் ஆகியோரை 2020ஆம் ஆண்டின் சிறந்த சைவப் பிரியர்களாக பீட்டா நிறுவனம் அறிவித்துள்ளது.

இது குறித்து பீட்டா இந்தியாவின் மக்கள் தொடர்பு இயக்குநர் சச்சின் பாங்கரா கூறியுள்ளதாவது:

சோனு சூட் மற்றும் ஷ்ரத்தா கபூர் இருவரும் ஒவ்வொரு முறை உணவு உண்ண அமரும்போதும் உலகை மாற்ற உதவி செய்கின்றனர். பழங்களும் காய்கறிகளை தொற்று நோய்களை ஏற்படுத்தியதில்லை. சோனு சூட் மற்றும் ஷ்ரத்தா கபூர் இருவரும் தங்கள் ரசிகர்களை சைவ உணவு சாப்பிட ஊக்கப்படுத்துவதற்காக பீட்டா அவர்களை கவுரவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் அமிதாப் பச்சன், அனுஷ்கா சர்மா, கங்கனா ரணாவத் ஆகியோர் பீட்டா நிறுவனத்தால் சிறந்த சைவப் பிரியர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in