

கரோனா பீதி சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வேளையில், கரோனா என்ற பெயரைத் திரைப்பட டைட்டிலாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர் ஒருவர்.
கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் பற்றிய பீதி உலக மக்களைப் பயமுறுத்தி வருகிறது. கிட்டத்தட்ட உலகம் முழுவதும் பரவியுள்ள கரோனா வைரஸால் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது இடங்களில் மக்கள் கூடுவது குறைந்துள்ளது. இந்தியாவில் கூட பல மாநிலங்களில் பள்ளிகள், திரையரங்கங்கள் எனப் பல பொது இடங்கள் மூடப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கரோனா வைரஸை மையமாக வைத்து திரைப்படம் இயக்கும் வேலைகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன. க்ருஷ்ணிகா லுல்லா என்ற இயக்குநர், 'கரோனா பியார் ஹை' என்ற தலைப்பை இந்தியத் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அமைப்பில் சமீபத்தில் பதிவு செய்துள்ளார். கரோனாவை மையமாக வைத்து உருவாகும் முதல் படம் இது.
இந்த டைட்டில் பதிவுக்கு இணையத்தில் கடும் சாடல்களையும், கிண்டல் பதிவுகளையும் காண முடிகிறது.