Published : 18 Feb 2020 12:25 pm

Updated : 18 Feb 2020 12:25 pm

 

Published : 18 Feb 2020 12:25 PM
Last Updated : 18 Feb 2020 12:25 PM

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘ரன் லோலா ரன்’: நாயகியாக டாப்ஸி ஒப்பந்தம்

taapsee-in-run-lola-run-remake

உலகப் புகழ் பெற்ற ‘ரன் லோலா ரன்’ திரைப்படத்தின் இந்தி ரீமேக்கில் டாப்ஸி நடிக்கவுள்ளார்.

1998 ஆம் ஆண்டு வெளியான ஜெர்மன் திரைப்படம் ‘ரன் லோலா ரன்’. கால சுழற்சி (time loop) வகை திரைப்படமான இது உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றது. சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்துக்கான ஆஸ்கர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளை இப்படம் வென்றுள்ளது.


இந்நிலையில் ‘ரன் லோலா ரன்’ திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. இதில் முக்கியக் கதாபாத்திரத்தில் டாப்ஸி, தாஹிர் ராஜ் பாஸின் ஆகியோர் நடிக்கவுள்ளனர். ஆகாஷ் பாட்டியா இயக்கவுள்ளார். இப்படத்தை சோனி நிறுவனத்துடன் இணைந்து எல்லிப்ஸிஸ் எண்டர்டைமெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த அறிவிப்பை சோனி நிறுவனம் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ''சீட் நுனிக்குக் கொண்டு வரும் இந்த த்ரில்லர் காமெடிப் படத்தில் எல்லிப்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைவதில் பெரும் மகிழ்ச்சி கொள்கிறோம். டாப்ஸி மற்றும் தாஹிர் ராஜ் பாஸின் நடிக்கும் 'லூப் லபேட்டா' படம் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 29 ரிலீஸ் ஆகிறது'' என்று தெரிவித்துள்ளது.

அன்பு வாசகர்களே....


வரும் ஏப்ரல் 14 வரை வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை



Run lola run remakeRun lola runTaapseeரன் லோலா ரன்டாப்ஸி ஒப்பந்தம்லூப் லபேட்டாLooop Lapeta

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author