உருவாகிறது ‘3 இடியட்ஸ் 2’ - நெட்டிசன்கள் உற்சாகம்

உருவாகிறது ‘3 இடியட்ஸ் 2’ - நெட்டிசன்கள் உற்சாகம்
Updated on
1 min read

‘3 இடியட்ஸ்’ படத்தின் 2-ம் பாகம் உருவாக இருப்பதாக வெளியான தகவலை இணையத்தில் உற்சாகமாக பகிர்ந்து வருகிறார்கள்.

சமீபத்தில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் உருவாக இருந்த ‘தாதாசாகிப் பால்கே’ பயோபிக் கைவிடப்பட்டது. இதில் அமீர்கான் நடிப்பதாக இருந்தது.

இதனைத் தொடர்ந்து ராஜ்குமார் ஹிரானி இயக்கவுள்ள படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. தற்போது வெளியாகியுள்ள தகவல் இணையவாசிகளை உற்சாகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

2009-ம் ஆண்டு ராஜ்குமார் ஹிரான் இயக்கத்தில் அமீர்கான், கரீனா கபூர், போமன் ஈரானி, மாதவன், சர்மன் ஜோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘3 இடியட்ஸ்’. சேதன் பகத் நாவலை மையமாக கொண்டு 55 கோடியில் உருவாக்கப்பட்ட இப்படம் ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை புரிந்தது.

மேலும், தேசிய விருது உட்பட பல்வேறு விருதுகளை குவித்தது. இப்படம் தமிழில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டது.

தற்போது ‘3 இடியட்ஸ்’ படத்தின் கதை முடிவடைந்த தருவாயில் இருந்து தொடங்கி 2-ம் பாகத்தை ராஜ்குமார் ஹிரானி எழுதி முடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பாகத்தைப் போலவே காமெடி, எமோஷன் கொண்ட கதையாக வந்திருப்பதாக படக்குழுவினர் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். இதனால் விரைவில் நடிகர்கள் அனைவரிடமும் பேசி 2-ம் பாகத்தின் பணிகள் தொடங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன.

உருவாகிறது ‘3 இடியட்ஸ் 2’ - நெட்டிசன்கள் உற்சாகம்
விஜய் தேவரகொண்டா படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in