அக்‌ஷய் குமாரின் டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தின் டிரெய்லரை பாராட்டிய மோடி

அக்‌ஷய் குமாரின்  டாய்லெட் ஏக் பிரேம் கதா படத்தின் டிரெய்லரை பாராட்டிய மோடி
Updated on
1 min read

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள 'டாய்லெட் ஏக் பிரேம் கதா' (Toilet Ek Prem Katha) படத்தின் டிரெய்லரை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து மோடி தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், "அக்‌ஷய் குமார் நடிப்பில் வெளிவரவுள்ள 'டாய்லெட் ஏக் பிரேம் கதா' திரைப்படம் தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. தூய்மை திட்டத்துக்காக இந்தியாவிலுள்ள 125 கோடி இந்தியர்களும் ஒன்றாக இணைந்து பணியாற்ற வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் இப்பதிவுக்கு நடிகர் அக்‌ஷய்குமார், "மிக்க நன்றி சார். மாற்றத்தை ஏற்படுத்துவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

ஆகஸ்ட் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தை ஸ்ரீ நாரயண் சிங் இயங்கியுள்ளார். இப்படத்தில் பூமி பெட்னேகர், அனுபம் கெர், சனா கான் ஆகியோர் நடித்துள்ளனர்.

</p>

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in