Last Updated : 04 Apr, 2017 03:49 PM

 

Published : 04 Apr 2017 03:49 PM
Last Updated : 04 Apr 2017 03:49 PM

நடிப்புலகின் ராணி ஸ்ரீதேவி: அனுபம் கெர் புகழாரம்

நடிப்புலகின் ராணி என ஸ்ரீதேவியை நடிகர் அனுபம் கெர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அனுபம் கெர், ''நடிப்புலகின் ராணியும் எனக்குப் பிடித்த நடிகையும் திரும்ப வந்துவிட்டார். 'மாம்' பட டீசர் இதோ உங்களுக்காக!'' என்று தெரிவித்துள்ளார். அத்துடன் 'மாம்' பட டீசர் இணைப்பையும் கொடுத்துள்ளார்.

அனுபம் கெர் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் 'கர்மா', 'சால்பாஸ்', 'லாட்லா', 'லாம்ஹே', 'ரூப் கி ராணி சோரோன் கா ராஜா' உள்ளிட்ட படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

ஸ்ரீதேவி 2012-ல் வெளியான 'இங்கிலிஷ் விங்கிலிஷ்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.

ஒரு பெண்ணை அடிப்படையாகக் கொண்டு வெளியாகவுள்ள திரைப்படம் 'மாம்'. இப்படத்தை ரவி உடையவர் இயக்க, ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் பாகிஸ்தான் நடிகர்கள் சாஜல் அலி மற்றும் அட்னான் சித்திக் ஆகியோர் நடித்துள்ளனர்.

படம் ஜூலை 14 அன்று, இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

பட டீசரைக் காண