ஜுன் 6 முதல் பி.கே

ஜுன் 6 முதல் பி.கே
Updated on
1 min read

அமீர்கான் நடித்துவரும் 'பி.கே' படம் ஜுன் 6, 2014ல் வெளிவரும் என்று அறிவித்துருக்கிறார்கள்.

ராஜ்குமார் ஹிரானி, வினோத் சோப்ரா, யு.டிவி. நிறுவனம், அமீர்கான் என மீண்டும் '3 இடியட்ஸ்' படக்குழு இணைந்திருக்கும் படம் 'பி.கே'. இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது.

ராஜ்குமார் ஹிரானியின் அரசியல் சார்பு படம் இது. அமீர்கான் ராஜஸ்தான் பாரம்பரிய உடையான காங்கரா உடையணிந்து தோன்றும் படம் தற்போது இணையத்தில் வெளியாகியிருக்கிறது.

'3 இடியட்ஸ்' படக்குழுவின் அடுத்த படம் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இதுவரை எந்தப்படத்திற்கும் இல்லாத அளவிற்கு யு.டிவி நிறுவனம் இப்படத்தினை பெரும் தொகை கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படம் ஜுன் 6, 2014ல் வெளிவரும் என்று யு.டிவி நிறுவனம் அறிவித்துள்ளது. டிசம்பர் 20, 2013ல் அமீர்கான் வில்லனாக நடித்திருக்கும் 'தூம் 3' படமும் வெளிவரவிருக்கிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in