ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித்

ஸ்ரீதேவிக்கு பதிலாக மாதுரி தீட்சித்
Updated on
1 min read

நடிகை ஸ்ரீதேவி கடந்த மாதம் 24-ம் தேதி துபாயில் காலமானார். இதனால் அவர் நடித்துவந்த படத்தின் பணிகள் பாதியில் நிற்கும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், ஸ்ரீதேவி நடித்துவந்த கதாபாத்திரத்தில் நடித்து, திரைப்படத்தை முடித்துக்கொடுக்க நடிகை மாதுரி தீட்சித் முன்வந்துள்ளார்.

தன் தாய் பங்கேற்ற கதாபாத்திரத்தை நிறைவு செய்துதர முன்வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி, மாதுரி தீட்சித்துக்கு நன்றி தெரிவித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். ‘‘அபிஷேக் வர்மா தற்போது இயக்கிவரும் படம் என் அம்மாவின் இதயத்துக்கு நெருக்கமானது. இந்த அழகான படத்தில் மாதுரிஜி பங்கேற்றுள்ளதற்காக அப்பா, குஷி, நான் ஆகிய மூவரும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்’’ என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in