

‘பேபி ஜான்’ படத்தின் வெகுவாக குறைந்துவிட்டதால், மலையாளத்தில் ஹிட்டடித்துள்ள ‘மார்கோ’ படத்தின் இந்திப் பதிப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள்.
‘தெறி’ இந்தி ரீமேக்கான ‘பேபி ஜான்’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. முதல் நாளில் ரூ.11.25 கோடி வசூல் செய்த இப்படம், இரண்டாவது நாளில் ரூ.5.13 கோடி மட்டுமே வசூல் செய்தது. வார இறுதி நாட்களில் வசூல் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம், ஒரே அளவிலேயே நீடித்து வருகிறது.
இதனால் பல்வேறு திரையரங்குகளில் ‘பேபி ஜான்’ படத்தினை தூக்கிவிட்டு, ‘மார்கோ’ இந்திப் பதிப்பினை திரையிட தொடங்கியிருக்கிறார்கள். ஏனென்றால் வன்முறை காட்சிகள் அதிகம் நிறைந்த ‘அனிமல்’ மாபெரும் வரவேற்பைப் பெற்றது. ‘அனிமல்’ படத்தின் வன்முறைக் காட்சிகளை விட ‘மார்கோ’வில் வன்முறைக் காட்சிகள் அதிகம். இதனால் ‘மார்கோ’ படமும் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என்பது திரையரங்க உரிமையாளர்களின் நம்பிக்கை.
மேலும், ‘மார்கோ’ படத்தை இந்தியில் விளம்பரப்படுத்தும் பணிகளையும் தொடங்கியிருக்கிறது படக்குழு. இதற்கான உன்னி முகுந்தன் மும்பைக்கு சென்றிருக்கிறார்.