“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” - நடிகை டாப்ஸி 

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” - நடிகை டாப்ஸி 
Updated on
1 min read

கடந்த ஆண்டே தனக்கு திருமணம் முடிந்துவிட்டது என்று டாப்ஸி தெரிவித்துள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கை, தன்னை விளம்பரப்படுத்திக் கொள்வது உள்ளிட்ட எந்தவொரு விஷயத்தையும் நடிகை டாப்ஸி செய்வதில்லை. விமான நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் கூட புகைப்படங்களுக்கு போஸ் கொடுப்பதில்லை. இந்த ஆண்டு தனது காதலர் மத்யாஸ் போ என்பவரை டாப்ஸி திருமணம் செய்துக் கொண்டார்.

தற்போது பேட்டியொன்றில் தனக்கு கடந்த ஆண்டே திருமணம் முடிந்துவிட்டதாக டாப்ஸி தெரிவித்துள்ளார். அப்பேட்டியில் டாப்ஸி, “உண்மையில், எனது திருமணத்தை நான் பகிரங்கமாகச் சொல்லாததால் அது குறித்து மக்களுக்குத் தெரியாது. எனக்கு இந்த வருடம் அல்ல, போன வருடம் டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. இன்று இதை நான் வெளிப்படுத்தாமல் இருந்திருந்தால் யாருக்கும் தெரிந்திருக்காது. நாங்கள் எங்கள் பெர்சனல் வாழ்க்கையை அந்தரங்கமாக வைத்திருக்க விரும்பினோம். மேலும் அது பற்றி எந்த அறிவிப்பும் செய்ய வேண்டாம் என்று முடிவு செய்தோம்.

எனது சகாக்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் வெளிப்படையானதை நான் பார்த்திருக்கிறேன். அது அவர்களை பாதிக்கவும் தொடங்குகிறது. அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை அவர்களின் தொழிலில் ஏற்படும் உயர்வு தாழ்வுகளை பாதிக்கும். எனவே, இரண்டிற்கும் இடையே ஒரு கோட்டை வரைய முடிவு செய்தேன். 2013ல் இருந்து எனது பார்ட்னரை எனக்கு தெரியும். அவரும் என்னை நன்கு அறிவார்” என்று தெரிவித்துள்ளார் டாப்ஸி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in