இம்தியாஸ் அலி படம் மூலம் பாலிவுட்டில் ஃபஹத் ஃபாசில் அறிமுகம்

இம்தியாஸ் அலி படம் மூலம் பாலிவுட்டில் ஃபஹத் ஃபாசில் அறிமுகம்

Published on

மும்பை: பிரபல பாலிவுட் இயக்குநர் இம்தியாஸ் அலியின் படம் மூலம் நடிகர் ஃபஹத் ஃபாசில் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாக உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

‘ஜப் வி மெட்’, ‘ராக்ஸ்டார்’, ‘ஹைவே’, ‘அமர் சிங் சம்கிலா’ படங்களை இயக்கியவர் இம்தியாஸ் அலி. பாலிவுட்டின் புகழ்பெற்ற இயக்குநரான இவர் அடுத்ததாக இயக்கும் புதிய படத்தில் ஃபஹத் ஃபாசில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் அவர் பாலிவுட்டில் நடிகராக அறிமுகமாகிறார். இதில் திரிப்தி டிம்ரி நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காதல் கதையை அடிப்படையாக கொண்டு இந்தப் படம் உருவாக உள்ளதாகவும், இம்தியாஸ் அலி தனது ‘வின்டோஸ் சீட் புரொடக்‌ஷன்ஸ்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ஃபஹத் ஃபாசில் நடிப்பில் அடுத்ததாக ‘புஷ்பா 2’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in