முதலில் ‘சிக்கந்தர்’, அடுத்து ‘எஸ்கே’ படம் - ஏ.ஆர்.முருகதாஸ் திட்டம்

முதலில் ‘சிக்கந்தர்’, அடுத்து ‘எஸ்கே’ படம் - ஏ.ஆர்.முருகதாஸ் திட்டம்
Updated on
1 min read

முதலில் ‘சிக்கந்தர்’ படத்தை முடித்துவிட்டு, பின்பு சிவகார்த்திகேயன் படத்தை தொடங்கவுள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.

சல்மான்கான் நடித்து வரும் ‘சிக்கந்தர்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் என இரண்டையும் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பும் மாறி மாறி நடைபெற்று வந்தது. தற்போது சிவகார்த்திகேயன் படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார்கள்.

இனிமேல் ‘சிக்கந்தர்’ படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்து, படம் வெளியான உடன் தான் சிவகார்த்திகேயன் படத்தை தொடங்க முடிவு செய்திருக்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் ‘சிக்கந்தர்’ வெளியாகவுள்ளது. அதற்கு பின் தான் சிவகார்த்திகேயன் படம் தொடங்கும்.

இதனால் சிவகார்த்திகேயன் படத்தின் வெளியீடு ஜூன் மாதத்தில் தான் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த இடைவெளியில் படத்தின் எடிட்டிங் பணிகள், கிராபிக்ஸ் பணிகள் உள்ளிட்டவற்றை முடித்துவிட ஏ.ஆர்.முருகதாஸ் முடிவு செய்திருக்கிறார். இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், விக்ராந்த் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்கள். அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in