ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக 10 ஆயிரம் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆர்டர்

ஏ.ஆர்.முருகதாஸ் படத்துக்காக 10 ஆயிரம் துப்பாக்கி, தோட்டாக்கள் ஆர்டர்
Updated on
1 min read

சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இதில் ருக்மணி வசந்த், வித்யூத் ஜம்வால் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இதற்கிடையே சல்மான் கான் நடிக்கும் ‘சிக்கந்தர்’ படத்தையும் அவர் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கியது.

சஜித் நாடியத்வாலா தயாரிக்கும் இதில் சத்யராஜ், ராஷ்மிகா மந்தனா உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது. 40 நாட்கள் நடைபெற இருக்கும் இதில் சல்மான் கான் 2 வேடங்களில் நடிப்பதாகத் தெரிகிறது. ஆக்‌ஷனுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்காக, 10 ஆயிரம் டம்மி கைத்துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களை ஆர்டர் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in