4-வது இந்தி படத்தை முடித்தார் ராஷ்மிகா

4-வது இந்தி படத்தை முடித்தார் ராஷ்மிகா
Updated on
1 min read

மும்பை: நடிகை ராஷ்மிகா தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூருடன் அவர் நடித்த ‘அனிமல்’ ஹிட்டானதை அடுத்து இந்தியில் அதிக வாய்ப்புகள் அவருக்கு வருகின்றன. இப்போது, புஷ்பா 2, சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், ராகுல் ரவீந்திரன் இயக்கும் ‘கேர்ள்பிரன்ட்’, மற்றும் ‘ரெயின்போ’ படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையே விக்கி கவுஷல் ஹீரோவாக நடிக்கும் ‘ஜாவா’என்ற படத்தில் நடித்து வந்தார். லக்‌ஷ்மண் உடேகர் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இது அவரது 4-வது இந்தி திரைப்படம். ஏற்கெனவே 3 இந்திப் படங்களில் நடித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in