வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் - அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ!

வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் - அட்லீ தயாரிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வீடியோ!
Updated on
1 min read

மும்பை: பாலிவுட் நடிகர் வருண் தவணுடன் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்கிறார் அட்லீ. இப்படத்துக்கான அறிவிப்பு வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

‘ஜவான்’ படம் மூலம் பாலிவுட்டில் தனக்கென தனிக்கொடி நாட்டிய அட்லீ தனது மனைவி ப்ரியாவுடன் இணைந்து பாலிவுட்டில் புதிய படம் ஒன்றை தயாரிக்கின்றார். இப்படம் அவரது இயக்கத்தில் வெளியான ‘தெறி’ படத்தின் ரீமேக் என கூறப்படுகிறது. ஆனால் படக்குழு இன்னும் டைட்டிலையோ, ரீமேக் குறித்தோ அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் பூஜை மும்பையில் நடைபெற்றது. இந்த வீடியோவை அட்லீ தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

காளீஸ் இயக்கும் இப்படத்தில் வருண் தவண், கீர்த்தி சுரேஷ், வாமிகா கபி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக அறிமுகமாவது குறிப்பிடத்தக்கது. மேலும் படம் குறித்த மற்ற தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. டைட்டில் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in