Published : 04 Jul 2023 06:46 AM
Last Updated : 04 Jul 2023 06:46 AM

‘தெறி’ இந்தி ரீமேக்கில் வருண் தவண் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

மும்பை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படம் இப்போது இந்தியில் ரீமேக் ஆகிறது. விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக ஜான்வி கபூர் நடிப்பதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் சார்பில் முரட் ஹெதேனியுடன் இணைந்து ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் சார்பில் அட்லியின் மனைவி ப்ரியா தயாரிக்கிறார். காளீஸ் இயக்குகிறார். இவர் ஜீவா நடித்த ‘கீ’படத்தை இயக்கியவர். இதன் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. அடுத்த வருடம் மே 31ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் அட்லீ, இப்போது ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உட்பட பலர் நடிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x