’டைகர் 3’ படத்தில் 12 ஆக்‌ஷன் காட்சிகள்

’டைகர் 3’ படத்தில் 12 ஆக்‌ஷன் காட்சிகள்
Updated on
1 min read

மும்பை: சல்மான் கான், கேத்ரினா கைஃப் நடித்துள்ள இந்தி படம் ‘டைகர் 3’. பான் இந்தியா முறையில் தமிழிலும் வெளியாகும் இந்தப் படத்தை யஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஸ்பை திரில்லராக உருவாகியுள்ள இதை மனீஷ் சர்மா இயக்கியுள்ளார். யஷ்ராஜ் பிலிம்ஸின் ஸ்பை யுனிவர்ஸ் படங்களிலேயே அதிக எண்ணிக்கையிலான ஆக் ஷன் காட்சிகள் கொண்ட படம் இது என்ற சாதனையை படைத்துள்ளது.

இது பற்றி இயக்குநர் மனீஷ் கூறும்போது, “சல்மான், கேத்ரினா இருவரும் ஆக்‌ஷன் காட்சிகளில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் 12 ஆக் ஷன் காட்சிகள் உள்ளன. ஹாலிவுட் படங்களுக்கு இணையாக இருக்கும். ரசிகர்களை இருக்கை நுனியில் அமரவைக்கும். அதிலும் ஐ-மேக்ஸில் பார்க்கும்போது புதிய அனுபவத்தை கொடுக்கும்” என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in