6 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்த அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’

6 நாட்களில் ரூ.621 கோடி வசூலித்த அட்லீ - ஷாருக்கானின் ‘ஜவான்’
Updated on
1 min read

மும்பை: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்துள்ள ‘ஜவான்’ திரைப்படம் வெளியான 6 நாட்களில் ரூ.621.12 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

‘ஜவான்’ திரைப்படம் வெளியான முதல் நாளில் இந்தி சினிமா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் உலகம் முழுவதும் ரூ.129 கோடி வசூலித்துள்ளதாக ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது. இரண்டாவது நாளில் இப்படம் ரூ.240 கோடி வசூலித்தது. மூன்றாவது நாள் படம் உலக அளவில் ரூ.ரூ.384.69 கோடி வசூலித்தது. 5 நாட்கள் முடிவில் ரூ.574.89 கோடியை வசூலித்ததாக படக்குழு அறிவித்திருந்தது.

ரூ.300 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இப்படம் 6 நாட்களில் ரூ.621.12 கோடியை வசூலித்து மிரட்டி வருகிறது. தற்போது வரை பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு லாபம் பார்த்துள்ள இப்படம் வார நாட்களிலும் வசூலில் குறையவில்லை. ‘ஜவான்’ படத்தின் வசூலை பாதிக்கும் என கருதப்பட்ட பிரபாஸின் ‘சலார்’ படமும் ஒத்திவைக்கப்பட்டதால் ‘ஜவான்’ ரூ.1000 கோடியைத் தாண்டி பாலிவுட்டில் புதிய சாதனை படைக்கும் என கூறப்படுகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in