அட்லீ படத்தில் இணைந்த வாமிகா கபி

அட்லீ படத்தில் இணைந்த வாமிகா கபி
Updated on
1 min read

மும்பை: அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து சூப்பர் ஹிட்டான படம், ‘தெறி’. 2016-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராஜேந்திரன், நடிகை மீனா மகள் நைனிகா, இயக்குநர் மகேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்திருந்த இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது.

விஜய் நடித்த கேரக்டரில் வருண் தவண் நடிக்கிறார். அவர் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் மூலம் அவர் இந்தியில் அறிமுகமாகிறார். மற்றொரு நாயகியாக வாமிகா கபி ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்தி நடிகையான இவர் தமிழில், ‘மாலை நேரத்து மயக்கம்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தை சினிஒன் ஸ்டூடியோஸ் சார்பில் முராத், அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கிறது. காளீஸ் இயக்குகிறார். இவர் தமிழில் ஜீவா நடித்த ‘கீ’ படத்தை இயக்கியவர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in