பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சவார்க்கர் காலமானார்

பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சவார்க்கர் காலமானார்

Published on

பிரபல மராத்தி நடிகர் ஜெயந்த் சாவர்க்கர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 87.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த பிரபல இந்தி நடிகர் ஜெயந்த் சவார்க்கர். இவர் இந்தி, மராத்தி மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆரம்ப காலத்தில் மேடைக்கலைஞராக இருந்த ஜெயந்த், பின்னர் மராத்தி, இந்தி மொழிப்படங்களில் நடித்து பிரபலமானார். குறிப்பாக ஹரி ஓம் விதாலா, 66 சதாசிவ், சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

இவருக்கு உஷா பென்ட்சே என்ற மனைவியும், இரு மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், வயது முதிர்வு மற்றும் ரத்த அழுத்தம், உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 10 நாட்களுக்கு முன் ஜெயந்த் தானேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in