பாலிவுட்டில் 18 வருடங்கள்: இயக்குநருக்கு வித்யா பாலன் நன்றி

பாலிவுட்டில் 18 வருடங்கள்: இயக்குநருக்கு வித்யா பாலன் நன்றி
Updated on
1 min read

நடிகை வித்யா பாலன் இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தமிழில் அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்திருந்தார். இவர் 2003-ம் ஆண்டு வெளியான ‘பலோ தேகோ’ என்ற பெங்காலி படம் மூலம் நடிகையாக அறிமுகமானாலும் இந்தியில் 2005-ம் ஆண்டு வெளியான ‘பரினீதா’ படம் தான் அவரை அடையாளம் காட்டியது. பின்னர் தொடர்ந்து ‘பா’, ‘இஷ்கியா', 'நோ ஒன் கில்ட் ஜெஸிகா', 'கஹானி', 'டர்ட்டி பிக்சர்' உட்பட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் ‘பரீனிதா’ படம் வெளியாகி கடந்த சனிக்கிழமை 18 வருடம் ஆனது. தான் இந்தி சினிமாவில் அறிமுகமாகி 18 வருடம் ஆனதை ஓட்டி, கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்த பரினீதா இயக்குநர் பிரதீப் சர்க்காருக்கு நன்றி தெரிவித்துள்ளார். “நான் நம்பாத போதும் என்னை நம்பி அந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி” என்று வித்யா பாலன் கூறியுள்ளார். இதையடுத்து நடிகை அதிதி ராவ் ஹைதாரி உட்பட பல திரைத்துறையினர் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in