

பிரபல இந்தி நடிகை கஜோல். இவர் தமிழில், ராஜீவ்மேனன் இயக்கிய ‘மின்சாரக்கனவு’ படத்தில் நடித்திருந்தார். தனுஷ் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இப்போது, நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கும் ‘லஸ்ட் ஸ்டோரீஸ் 2’ தொடரில் நடித்துள்ளார். இந்தத் தொடர் வரும் 15ம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், அவர் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ளப் பதிவில், “வாழ்வின் கடினமான சோதனைகளில் ஒன்றை எதிர்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.