தமிழ் சினிமா
பெண் குழந்தையை தத்தெடுத்தார் நடிகை அபிராமி
தமிழில் ‘விருமாண்டி’, ‘மிடில் கிளாஸ் மாதவன்’, ‘சமுத்திரம்’, ‘சுல்தான்’, ‘நித்தம் ஒரு வானம்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் மலையாள நடிகை அபிராமி.
இவர் கணவர் ராகுல். இவர்கள் பெண் குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர். இதை நடிகை அபிராமி, அன்னையர் தினமான நேற்று அறிவித்துள்ளார். குழந்தைக்கு கல்கி என்று பெயர் வைத்துள்ளனர்.
இதுபற்றி அவர், நானும் ராகுலும் கடந்த வருடம் எங்கள் மகளைத் தத்தெடுத்தோம். அது அனைத்து வகையிலும் வாழ்க்கையை மாற்றி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். அவருக்குத் நடிகர், நடிகைகள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.
