சித்தராமையா பயோபிக்கில் விஜய் சேதுபதி?

சித்தராமையா பயோபிக்கில் விஜய் சேதுபதி?

Published on

கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர்,கடந்த 2013 முதல் 2018 வரை முதல்வராக இருந்தார். இவர், வாழ்க்கையை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது. கர்நாடக முன்னாள் அமைச்சரும் சித்தராமையாவின் தீவிர விசுவாசியுமான சிவராஜ் இதைத் தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பான் இந்தியா முறையில் 5 மொழிகளில் படத்தை உருவாக்க இருப்பதாகவும் இதில், விஜய் சேதுபதியை,சித்தராமையா கேரக்டரில் நடிக்க வைக்கத் திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 2023 சட்டமன்ற தேர்தலுக்கு முன் வெளியிட திட்டமிட்டு இருப்பதாகவும் கர்நாடகாவில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்தப் படம் தொடர்பாக, தங்களை யாரும் தொடர்பு கொள்ளவில்லை எனவிஜய் சேதுபதி தரப்புத் தெரிவித்துள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in