

சினிமாவில் மட்டும் ஒற்றை நட்சத்திரத்தின் ஆதிக்கத்தையே ரசிகர்கள் விரும்புகிறார்கள் என்று தவறாக நம்பப்பட்டு வந்தது. நட்சத்திர நடிகர்களின் தன்முனைப்புக்குத் தீனி போடுவதற்காகவே கட்டமைத்து வளர்க்கப்பட்ட பிம்பம் இது.
ஒன்றுக்கு மேற்பட்ட நட்சத்திரங்கள் நடித்த தரமான படங்களை, தமிழ்ப் பார்வையாளர்கள் என்றுமே வரவேற்கத் தயங்கியதில்லை.
‘விக்ரமி’ன் இவ்வளவு பெரிய வெற்றிக்கான முதன்மையான காரணங்களில் ஒன்று, அது அசலான ‘மல்ட்டி ஸ்டாரர்’ படமாக இருப்பதே.
கமல்ஹாசன், ஃபகத் ஃபாசில், விஜய் சேதுபதி ஆகிய மூன்று பேருக்கும் இந்தப் படத்தில் சமமான முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது. கெளரவத் தோற்றம் என்றாலும் நடிகர் சூர்யா நடித்திருந்த இறுதிக் காட்சியும் ரசிகர்களைப் பெரும் ஆரவாரத்துடன் திரையரங்கைவிட்டு வெளியேற வழிவகுத்திருக்கிறது.
இனி வரும் காலங்களில் பிற நட்சத்திர நடிகர்கள், தமது சந்தேகங்களையும் பதற்றங்களையும் களைந்து ‘மல்ட்டி ஸ்டாரர்’ படங்களில் நடிக்க வேண்டும் என்பதே பார்வையாளர்களின் விருப்பம் என்பதை இந்தப் படத்தின் வெற்றி உணர்த்தியிருக்கிறது.
இயக்குநர்களின் சுதந்திரம்
பொதுவாகப் பெரிய நட்சத்திரங்களின் படங்களில், ரசிகர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவும் அவருடைய நட்சத்திரப் பிம்பத்தை மனத்தில் வைத்தும் படத்துக்கு முதலீடு செய்கிறவர்களின் அழுத்தம் காரணமாகவும் இளம் இயக்குநர்கள் பல விஷயங்களை வலிந்து திணிக்க வேண்டியிருக்கிறது.
ஆனால், திறமையான இளம் இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து, அவர்களின் கதை, திரைக்கதையின் தேவைகளுக்கு நட்சத்திரங்கள் தம்மை ஒப்புக்கொடுப்பது மிகவும் முக்கியம் என்பதை ‘விக்ரம்’ உணர்த்தியுள்ளது.
லோகேஷும் தீவிர கமல் ரசிகர்தான். ஆனால் ‘விக்ரம்’ படத்தில் கமலின் பழைய படங்களை நினைவுபடுத்தி ரசிகர்களை மகிழ்விக்கும் தருணங்கள் கதைக்குள் அழகாகப் பொருத்தப்பட்டுள்ளன. கதைக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
> இது, ச.கோபாலகிருஷ்ணன் எழுதிய 'இந்து தமிழ் திசை' ப்ரீமியம் கட்டுரையின் ஒரு பகுதி. தினமும் பயனுள்ள ப்ரீமியம் கட்டுரைகளை வாசிக்க > ப்ரீமியம் கட்டுரைகள்
> ப்ரீமியம் கட்டுரைகள் & இ-பேப்பர் வாசிக்க - டிஜிட்டல் சந்தா திட்டங்கள்