இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்! - சிஎஸ்கே வெற்றிக்கு பிரபலங்கள் வாழ்த்து

இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்! - சிஎஸ்கே வெற்றிக்கு பிரபலங்கள் வாழ்த்து
Updated on
1 min read

ஐபிஎல் போட்டியில் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணிக்கு பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

துபாயில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை 10 விக்கெட்டில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபாரமான வெற்றி பெற்றது.

3 தொடர் தோல்விகளுக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றிருப்பது சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. பலரும் இந்த வெற்றியைத் தங்கள் சமூக வலைதளப் பக்கங்களில் கொண்டாடி வருகின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் சிஎஸ்கே அணியினருக்குத் தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் வெற்றி குறித்துப் பிரபலங்கள் தங்களுடைய ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதன் தொகுப்பு:

அதுல்யா ரவி: அந்த மகிழ்ச்சியான முகம்! அட்டகாசமான 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி! ஒரு சாம்பியன் அணியின் மீள்வருகை இப்படித்தான் இருக்கும். வந்துட்டோம்னு சொல்லு!

அருண் விஜய்: இதைத்தான் நாங்கள் எதிர்பார்த்தோம்!!

தமன்: என்ன ஒரு மீள்வருகை? வாட்ஸன், டூப்பிளசிஸ் என்ன ஒரு பார்ட்னர்ஷிப்? 181/0 என்ற கணக்கில் பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!! புத்திசாலித்தனமான கேப்டன்சி. நல்ல சக்திகள் திரும்பி வந்துள்ளன.

வரலட்சுமி: இப்படித்தான் நடக்க வேண்டும்..!!! வார்த்தைகளை விட செயல்களே அதிகம் பேசும்..!! போதுமான அளவு பேசியாகிற்று...!!!

வெங்கட் பிரபு: ஒருவழியாக சென்னை அணி இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது! சிஎஸ்கே ஓப்பனர்களின் என்ன ஒரு அற்புதமான பேட்டிங்?

சதீஷ்: மீண்டு வந்தோம்... தொடரும் என்று நம்புவோம்....

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in