தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை படைத்த 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி

தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனை படைத்த 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி

Published on

ரஜினிகாந்த் கலந்து கொண்ட பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சி தொலைக்காட்சி வரலாற்றில் புதிய சாதனையை படைத்துள்ளது.

டிஸ்கவரி சேனலில் பியர் க்ரில்ஸின் 'இன் டு தி வைல்ட்' நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். அப்போது பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து வனப்பகுதிகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொண்டார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் ரஜினிகாந்த் தோன்றுவது இதுவே முதல் முறை. இந்நிகழ்ச்சி கடந்த மார்ச் 23 இரவு டிஸ்கவரி தமிழ் சேனலில் ஒளிபரப்பப்பட்டது.

ரஜினிகாந்த் பங்கேற்ற இந்த நிகழ்40 லட்சம் பேரால் பார்க்கப்பட்டு தொலைக்காட்சி வரலாற்றிலேயே இரண்டாவது அதிக புள்ளிகளை பெற்ற நிகழ்ச்சி என்ற பெயரையும் தக்கவைத்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஒளிபரப்பின் போது இந்நிகழ்ச்சியை பார்த்தவர்களின் எண்ணிக்கை 1.2 கோடி பேர். அதற்கு முந்தைய 4 வாரங்களை விட 86 சதவீதம் அதிக எண்ணிக்கை இது. டிஸ்கவரி சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் முந்தைய வாரங்களை விட 5 மடங்கு அதிகரித்துள்ளது.

டிஸ்கவரி தமிழ் சேனலின் பார்வையாளர்களின் எண்ணிக்கை பிரபல தமிழ் தொலைகாட்சி சேனல்களை விட 20 மடங்கு அதிகரித்துள்ளதாக ஒளிபரப்பு பார்வையாளர் ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

சமூக வலைதளங்களிலும் இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது. #ThalaivaOnDiscovery என்ற ஹாஷ்டேக் 1.41 பில்லியன் முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in