சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.13 | படக்குறிப்புகள்

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.13 | படக்குறிப்புகள்
Updated on
1 min read

காலை 9.30 மணி | HELLARO | DIR: ABHISHEK SHAH | GUJARATI | 2019 | 123'

1975ல் நடக்கும் கதை. மஞ்ச்ரி என்ற இளம்பெண், ரான் ஆப் கட்ச் நிலப்பகுதியில் ஒரு சிறிய கிராமத்தில்தான் அவர் திருமணம் செய்து கொண்டார். அங்கு, ஆணாதிக்க ஆணைகளால் கட்டப்பட்ட பெண்கள் குழுவில் அவர் இணைகிறார். அந்த அடக்குமுறையிலிருந்து அவர்களுக்கு கிடைக்கும் விடுதலை என்பது ஒவ்வொருநாளும் காலையில் தொலைதூர நீர்நிலைக்கு தண்ணீர் எடுக்க வெளியே செல்லும்போதுதான். அப்படி ஒரு நாள், தண்ணீர் கொண்டுவரச் செல்லும் வழியில், அவர்கள் பாலைவனத்தின் நடுவில் ஒருவனை சந்திக்கிறார்கள். அது அவர்களின் வாழ்க்கையையே என்றென்றும் மாற்றுகிறது.

பகல் 12.00 மணி | THE MAN WHO SURPRISED EVERYONE / TCHELOVEK KOTORIJ UDIVIL VSEH | DIR: NATASHA MERKULOVA & ALEKSEY CHUPOV | | RUSSIA / ESTONIA / FRANCE | 2018 | 105'

சைபீரியன் காடுகளில் தைரியமாக வேலை செய்து வரும் மாநில வனக் காவல் அதிகாரி ஈகோர். தனது குடும்பத்தால், கிராமத்தினரால் விரும்பப்படும், மதிக்கப்படும் ஒருவன். அவன் மனைவியோடு சேர்ந்து இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகிறான். ஆனால் ஒரு நாள் தனக்கு கான்சர் இருப்பதும், தான் வாழ இரண்டு மாதங்கள் மட்டுமே உண்டு என்றும் தெரிந்து கொள்கிறான். நோயை எதிர்க்கும் ஒரு வழியாக பெண் வேடம் அணிந்து கொள்கிறான். இதனால் ஏற்படும் விளைவுகளே கதை.

மாலை 3.00 மணி | MEI | DIR: SA BASKARAN| TAMIL | 2019 | 112'


மாலை 6.00 மணி | JIIVI | DIR: VJ GOPINATH| TAMIL | 2019 | 114'

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in