Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள்

Click Bits: கோவாவில் குவிந்த 90’ஸ் நட்சத்திரங்கள்

Published on

90-களின் பிரபல நடிகர், நடிகைகள் கோவாவில் ஒன்றுகூடி இருக்கிறார்கள். இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன

80கள், 90களில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஒவ்வொரு ஆண்டும் ஓர் இடத்தை தேர்வு செய்து அங்கு சந்தித்துக் கொள்வது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் ஒரு நிறத்தை தேர்வு செய்து அந்த ஆடைகளை அனைவரும் அணிவர்.

அந்த வகையில் 90-களில் பிரபலமாக இருந்த நட்சத்திரங்கள் இந்த ஆண்டு தேர்வு செய்திருக்கும் இடம் கோவா. அனைவரும் இந்த முறை வெள்ளை நிற ஆடையை தேர்வு செய்துள்ளனர்.

இந்த சந்திப்பு சிரிப்பு, நினைவுகள் மற்றும் நெகிழ்ச்சியான தருணங்களுடன் அமைந்திருக்கிறது.

நட்சத்திரங்கள் நிறைந்த இந்த விருந்தினர் பட்டியலில், மூத்த இயக்குநர்களான கே.எஸ். ரவிக்குமார், ஷங்கர், லிங்குசாமி, மோகன் ராஜா மற்றும் பிரபு தேவா ஆகியோர் அடங்குவர்.

மேலும் பிரபல நடிகர்களான ஜெகபதி பாபு மற்றும் மேகா ஸ்ரீகாந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இவர்களுடன், 90களில் வெள்ளித்திரையை ஆண்ட முன்னணி நாயகிகளான சிம்ரன், மீனா, சங்கவி, மாளவிகா, சங்கீதா, ரீமா சென், மகேஸ்வரி மற்றும் சிவரஞ்சனி ஆகியோரும் இணைந்துள்ளனர்.

நடிகைகள் அனைவரும் சேர்ந்து நடனமாடும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in