புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’

புதுமுகங்கள் நடிப்பில் 2கே கிட்ஸ் வாழ்க்கையை பேசும் ‘நீ ஃபாரெவர்’

Published on

அசோக்குமார் கலைவாணி இயக்கத்தில், புதுமுகங்கள் சுதர்ஷன் கோவிந்த், அர்ச்சனா ரவி நடிப்பில் உருவாகும் படம் ‘நீ ஃபாரெவர்’. ஜென் z இளைஞர்களின் உறவுச் சிக்கல்கள் குறித்து பேசும் வகையில் இப்படம் உருவாகியுள்ளது.

ஜென் ஸ்டூடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரிக்கும் இப்படத்துக்கு அஸ்வின் ஹேமந்த் இசையமைக்கிறார். ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். எஸ்.ஏ.நாகார்ஜுன் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார்.

27 நாட்கள் நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையின் முக்கிய இடங்களிலும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முழுப்பணிகளும் முடிந்த நிலையில், படத்தை திரைக்கு கொண்டுவரும் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விரைவில் படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய இயக்குநர் 6-வது சீசன் டைட்டில் வின்னர் சுதர்ஷன் கோவிந்த் இப்படத்தில் நாயகனாக நடித்துள்ளார். மிஸ் சவுத் இந்தியா அர்ச்சனா ரவி நாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் ஒய் ஜி மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே.ஸ்ரீராம், ரெத்திகா ஸ்ரீனிவாஸ், செல்லா, பிருந்தா, உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in