பாலிவுட்
த்ரில்லர் படத்தில் நடிக்க ரூ.17 கோடி கேட்டாரா ஷ்ரத்தா கபூர்?
இந்தி நடிகை ஷ்ரத்தா கபூர். இவர் ஏபிசிடி 4, ராக் ஆன் 2, பாகி உள்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்துக் கடந்த ஆண்டு வெளியான 'ஸ்த்ரீ 2' படம் வெற்றி பெற்றது. இதையடுத்து ஷ்ரத்தா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளார். இந்நிலையில் ஏக்தா கபூர் தயாரிக்கும் த்ரில்லர் படத்தில் நடிக்க அவர் ரூ.17 கோடி சம்பளம் கேட்டதாகவும் அத்துடன் லாபத்தில் பங்கு வேண்டும் என்றதாகவும் செய்திகள் வெளியாயின. ஏக்தா கபூர் மறுத்ததால் படத்திலிருந்து விலகி விட்டதாகவும் தெரிகிறது. இந்நிலையில் அது அனைத்தும் வதந்தி என்று அந்த படத்தை இயக்க இருக்கும் ரஹு அனில் பார்வே தெரிவித்துள்ளார். ஆனால், ஷ்ரத்தா கபூர் படத்தில் இருக்கிறாரா, இல்லையா என்பது பற்றி அவர் தெரிவிக்கவில்லை.
