ஆர்.எம்.வீரப்பன் | கோப்புப்படம்
ஆர்.எம்.வீரப்பன் | கோப்புப்படம்

சத்யா மூவிஸ் தயாரிப்பில் ஆர்.எம்.வீரப்பன் ஆவணப்படம்

Published on

எம்.ஜி.ஆர் நடித்த தெய்வத்தாய், காவல்காரன், நான் ஆணையிட்டால், ரிக்‌ஷாகாரன், இதயக்கனி, ரஜினி நடித்த மூன்றுமுகம், பாட்ஷா உட்பட பல படங்களை சத்யா மூவிஸ் சார்பில் தயாரித்தவர் மறைந்த ஆர்.எம்.வீரப்பன். மூத்த அரசியல் தலைவருமான அவர், 5 முறை தமிழக அமைச்சராகப் பதவி வகித்தவர்.

அவரைப்பற்றி இன்றைய தலைமுறையினர் தெரிந்து கொள்ளும் வகையில், ‘கிங் மேக்கர்’ என்ற ஆவணப்படம் உருவாகிறது. சத்யா மூவிஸ் தங்கராஜ் தயாரிக்கும் இந்த ஆவணப்படம், இயக்குநர், தயாரிப்பாளர் பதம் வேணு குமார் மேற்பார்வையில் உருவாகிறது. அரசியல் தலைவர்கள், திரையுலகினர் இந்த ஆவணப்படத்தில் பங்கேற்கின்றனர். இந்த ஆவணப்படத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ள இசை அமைப்பாளர் இளையராஜா, தானும் இதில் பங்கேற்பதாக உறுதியளித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in