தூத்துக்குடி அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷால்!

தூத்துக்குடி அருகே கிராமத்துக்கு குடிநீர் வசதி செய்து தந்த நடிகர் விஷால்!

Published on

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே குமாரசக்கனாபுரம் கிராமத்துக்கு நடிகர் விஷால் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக நடிகர் விஷால் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்: தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் தற்போது நடித்து வரும் ‘விஷால்34’ புதிய படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் பகுதியில் நடைபெற்று வருகிறது. படப்பிடிப்பின் இடைவெளியில் குமாரசக்கனாபுரம் ஊராட்சி பொதுமக்கள் நடிகர் விஷாலை சந்தித்து குடிநீர் வசதி இல்லாமல் மிகவும் கஷ்டபடுவதாகவும் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தரும்படி கோரிக்கை வைத்தனர்.

அக்கோரிக்கையை உடனே நிறைவேற்றுவதாக பொதுமக்களிடம் வாக்குறுதியளித்த நடிகர் விஷால், குமாரசக்கனாபுரம் ஊராட்சி தலைவர் ராமகிருஷ்ணனை சந்தித்து கலந்தாய்வு செய்து ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அம்மக்கள் பயன்பெறும் வகையில் தனது தேவி அறக்கட்டளை சார்பில் ஆழ்துளை கிணறு (போர்) அமைத்து கொடுத்துள்ளார். மேலும் 2 சின்டெக்ஸ் டேங்க் அமைத்து குடிநீர் வசதிக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in