நாயகன் மீண்டும் வரார் - கமலின் ‘நாயகன்’ நவம்பர் 3-ல் ரீ-ரிலீஸ்

நாயகன் மீண்டும் வரார் - கமலின் ‘நாயகன்’ நவம்பர் 3-ல் ரீ-ரிலீஸ்

Published on

சென்னை: கமல் நடிப்பில் வெளியாக ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘நாயகன்’ திரைப்படம் அவரது பிறந்த நாளையொட்டி வரும் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1987-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நாயகன்’. இளையராஜா இசையமைதிருந்த இப்படத்தை முகுந்தன் ஸ்ரீனிவாசன் தயாரித்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு மேற்கொண்டிருந்தார். லெனின், வி.டி.விஜயன் இருவரும் படத்தொகுப்பு செய்திருந்தனர். சரண்யா, ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி, கார்த்திகா, விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

மும்பையை பின்னணியாக கொண்ட படத்தில் வேலு நாயக்கர் கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை கமல் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப்படத்துக்காக கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி ‘நாயகன்’ படம் நவம்பர் 3-ம் தேதி ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in