Published : 10 Jun 2023 12:06 AM
Last Updated : 10 Jun 2023 12:06 AM
சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ திரைப்படம் ஜூலை 14 அன்று திரைக்கு வர உள்ள நிலையில், படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவீஸ் கைப்பற்றியுள்ளது.
சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிக்கும் படம், ‘மாவீரன்’. ‘மண்டேலா’ படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்குகிறார். இயக்குநர் மிஷ்கின் வில்லனாகவும், நடிகை சரிதா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். விது அய்யனார் ஒளிப்பதிவு செய்ய ஃபிலோமின்ராஜ் எடிட்டிங் பணிகளை கவனிக்கிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கில் பைலிங்குவல் படமாக உருவாகி வருகிறது.
தெலுங்கில் இந்தப் படத்துக்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு 'ஆடை', 'மண்டேலா' ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான ‘சீன் ஆ.. சீன்..ஆ’ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஜூலை 14-ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது என்பது லேட்டஸ்ட் அப்டேட். இதனை படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.
We are Elated to announce that market leader @RedGiantMovies_ will be releasing #Maaveeran across TamilNadu! @Siva_Kartikeyan #MaaveeranFromJuly14th #VeerameJeyam @madonneashwin @AditiShankarofl @iamarunviswa @DirectorMysskin #Saritha @suneeltollywood @iYogiBabu… pic.twitter.com/1ln2Fz6BUY
— Shanthi Talkies (@ShanthiTalkies) June 9, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT