

சென்னை: அஞ்சல்துறையில் தபால் அலுவலர் மற்றும் உதவி தபால் அலுவலர் பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பதாரர்கள் 10-ம்வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கூடுதல் தகுதியாக சைக்கிள்ஓட்ட தெரிந்திருக்க வேண்டும்.18 முதல் 40 வயதுவரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தபால் அலுவலர் பணிக்கு ரூ.12 ஆயிரம் முதல் ரூ.29,380 வரையும், உதவி தபால் அலுவலர் பணிக்கு ரூ.10 ஆயிரம் முதல் ரூ.24,470 வரையும் வழங்கப்படும். இப்பணிக்கு தேர்வு கிடையாது. 10-ம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வரும் ஜுன் 11-ம் தேதி கடைசி நாளாகும்.