அஞ்சல் துறை பணி தேர்வு ஆன்லைன் படிவத்தில் மாற்றம்: மதுரை எம்பிக்கு துறை அதிகாரி உறுதி

சு.வெங்கடேசன் எம்பி | கோப்புப் படம்
சு.வெங்கடேசன் எம்பி | கோப்புப் படம்
Updated on
1 min read

மதுரை: அஞ்சல் துறை பணிக்கான ஆன்லைன் படிவத்தில் தமிழக தேர்வர்கள் விண்ணப்பிக்கும் வகையில் மாற்றம் செய்யப்படும் என்று அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் உறுதியளித்துள்ளதாக சு.வெங்கடேசன் எம்.பி. தெரிவித்தார்.

இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல் துறை சார்பில் கிராமின் டாக் சேவக் காலி பணியிடங்களுக்கு ஜன.27 முதல் பிப்.16 வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 10-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும்.

ஆன்லைன் விண்ணப்பத்தில் 6-வது பாடமாக ‘தெரிவு மொழி’ என குறிப்பிடப்பட்டுள்ளதால் தமிழகத்தைச் சேர்ந்த தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியாமல் சிரமப்பட்டனர். இது குறித்து அஞ்சல் துறைச் செயலாளர் வினீத் பாண்டே, தமிழ்நாடு தலைமைப் பொது மேலாளர் பி.செல்வக்குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதினேன்.

இந்நிலையில், அஞ்சல் பொது நிர்வாக துணை இயக்குநர் ராசி சர்மா என்னை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். 6-வதாக உள்ள ‘தெரிவு மொழி’ என்பதை தமிழகத் தேர்வர்கள் பூர்த்தி செய்யத் தேவையில்லாத வகையில் படிவம் மாற்றப்படும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்படும் என்று அவர் கூறினார். இவ்வாறு எம்.பி. தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in