Published : 05 Dec 2022 04:33 AM
Last Updated : 05 Dec 2022 04:33 AM

நெல்லை | சுந்தரனார் பல்கலை., டிவிஎஸ் நடத்தும் வேலைவாய்ப்பு முகாம்

பிரதிநிதித்துவப் படம்

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் அண்ணாதுரை வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி மனோன்மணி யம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் மற்றும் டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனத்துடன் இணைந்து ஐசிஐசிஐ வங்கி பணிக்கு வேலைவாய்ப்பு முகாம் வரும் 9-ம் தேதி பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறுகிறது.

ஐசிஐசிஐ வங்கிக்கு வாடிக்கையாளர் உறவு மேலாளர் (Relationship Manager) பணிக்கு தகுதியுள்ள பட்டதாரி மாணவ,மாணவியரை தேர்ந்தெடுப்பதற்காக இந்த வளாக வேலைவாய்ப்பு முகம் பல்கலைக்கழக சுந்தரனார் அரங்கில் வரும் 9-ம் தேதி காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வசிக்கும், 2019 முதல் 2022-ம் ஆண்டுவரை ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ளலாம்.

தேர்ந்தெடுக்கப்படுவோருக்கு டிவிஎஸ் பயிற்சி மற்றும் சேவைகள் நிறுவனம் மூலமாக 21 நாள் இணைய வழி பயிற்சி அளிக்கப்படும். பின்னர் ஐசிஐசிஐ வங்கி பணியில் அமர்த்தப்படுவர். இப்பயிற்சிக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இக் கட்டணத்தை டிவிஎஸ் நிறுவனம் வங்கிகள் மூலமாக தவணை முறையில் செலுத்த ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளனர். தவணை தொகையை வங்கி பணிக்கு சென்றபின் செலுத்தினால் போது மானது.

நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புவோர் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது சுயபதிவேடு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அட்டையுடன் வரவேண்டும். மேலும் விவரங்களுக்கு 96000 44872 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x