கிருஷ்ணகிரி, தருமபுரி அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கிருஷ்ணகிரி, தருமபுரி அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு
Updated on
1 min read

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான விண்ணப் பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுதொடர்பாக ஆட்சியர்கள் ஜெயசந்திரபானுரெட்டி (கிருஷ் ணகிரி), சாந்தி (தருமபுரி) ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட பள்ளி கல்வித்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊராட்சி ஒன்றிய, நகாட்சி, அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து மூலமாக விண்ணப்பத்தை நேரடியாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாக உரிய கல்வித் தகுதி சான்றுகளுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணியிட விவரங்கள் முதன்மைக் கல்வி, மாவட்ட கல்வி அலுவலகங்களில் அறிவிப்பு பலகையில் வெளியிடப்பட்டுள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நாளை (6-ம் தேதி) வரை வழங்கலாம். இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி

கிருஷ்ணகிரி கல்வி மாவட்டத்துக்கு deokgi2@gmail.com, மத்தூர் கல்வி மாவட்டத்துக்கு deomathur2018@gmail.com, ஓசூர் கல்வி மாவட்டத்துக்கு deohosur@gmail.com, தேன்கனிக்கோட்டை கல்வி மாவட்டத்துக்கு deodkottai@gmail.com, தருமபுரி கல்வி மாவட்டத்துக்கு dharmapurideo@gmail.com, அரூர் கல்வி மாவட்டத்துக்கு deoharur@gmail.com, பாலக்கோடு கல்வி மாவட்டத்துக்கு deopalacode@gmail.com ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கும் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in