Published : 15 Nov 2019 15:30 pm

Updated : 15 Nov 2019 15:30 pm

 

Published : 15 Nov 2019 03:30 PM
Last Updated : 15 Nov 2019 03:30 PM

வேலை வேண்டுமா?- அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், உதவியாளர் வேலை

anna-university-recruitment-2019

சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட இணைப் பேராசிரியர், திட்ட உதவியாளர், அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்குத் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்த விவரங்கள் பின்வருமாறு:


1. வேலையின் பெயர்: Technology Commercialization Officer
2. காலியிடங்கள்: 1
3. ஊதியம்: ரூ.1,00,000.
4. கல்வித் தகுதி: அறிவியல் அல்லது பொறியியல் அல்லது மேலாண்மைப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. அனுபவம்: வேலை அனுபவம் குறைந்தது 15 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
*

1. வேலையின் பெயர்: Technology Commercialization Executive
2. காலியிடங்கள்: 2
3. ஊதியம்: ரூ.35,000.
4. கல்வித் தகுதி: பொறியியல் மற்றும் எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. அனுபவம்: வேலை அனுபவம் குறைந்தது 8 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
*

1. வேலையின் பெயர்: திட்ட இணைப் பேராசிரியர்
2. காலியிடங்கள்: 4
3. ஊதியம்: ரூ.26,000.
4. கல்வித் தகுதி: பொறியியல் அல்லது எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. அனுபவம்: வேலை அனுபவம் குறைந்தது 5 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
*
1. வேலையின் பெயர்: திட்ட உதவியாளர்
2. காலியிடங்கள்: 2
3. ஊதியம்: ரூ.20,000.
4. கல்வித் தகுதி: பொறியியல் அல்லது எம்பிஏ படிப்பை முடித்திருக்க வேண்டும்.
5. அனுபவம்: வேலை அனுபவம் குறைந்தது 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
*
1. வேலையின் பெயர்: அலுவலக உதவியாளர் மற்றும் ஓட்டுநர்
2. காலியிடங்கள்: 1
3. ஊதியம்: ரூ.16,000.
4. கல்வித் தகுதி: 8-வது தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முறையான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
5. அனுபவம்: வேலை அனுபவம் குறைந்தது 2 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு: எதுவுமில்லை.

எப்படி விண்ணப்பிப்பது?
அஞ்சல் வழியாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். http://ctdt.annauniv.edu/ என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். அதைத் தரவிறக்கம் செய்தி, உரிய ஆவணங்களோடு, அந்தப் படிவத்தையும் விண்ணப்பப் படிவத்தையும் The Director, Centre for Technology Development and Transfer, Anna University, Chennai- 25 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 25.11.19

இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு: http://ctdt.annauniv.edu/downloads/recruitmenttec.pdf என்ற இணையதள முகவரியை அணுகலாம்.

Anna universityவேலை வேண்டுமாஅண்ணா பல்கலைக்கழகம்ஆசிரியர்உதவியாளர் வேலைRecruitment

You May Like

More From This Category

More From this Author