

சென்னை.: உயர்கல்வி பயிலும் மாணவர்களும், கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை பயிலும் மாணவர்களும் நாட்டுக்கு சேவைபுரியும் வகையில், பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறியச் செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டிடக் கலைகளில் உயர்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ என்ற இணையவழி வெப்பினார் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் மாலை 4 மணிக்குநடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமி இணைந்துள்ளது.
வரும் (அக். 7) சனிக்கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், தெற்கு ரயில்வே துணை தலைமை சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு பொறியாளர் என்.பால்சாமி ‘இந்திய ரயில்வேயில் வாய்ப்புகள்’ எனும் தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
வரும் ஞாயிற்றுக்கிழமை (அக். 8) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ள வெப்பினாரில், மதுரை ரயில்வே மருத்துவமனை உதவி தலைமைமருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சி.சந்தோஷ், ‘யுபிஎஸ்சி-யோடு இணைந்த மருத்துவப் பணி வாய்ப்புகள்’ என்ற தலைப்பில் உரையாற்ற உள்ளார்.
இந்த இரு வெப்பினார் நிகழ்வுகளையும் ஒருங்கிணைக்கும் ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு, பங்கேற்பாளர்களுடன் கலந்துரையாட உள்ளார்.
நிகழ்வில் பங்கேற்க...: இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP003 என்ற லிங்க்-ல் பதிவுசெய்து கொள்ளுங்கள். கூடுதல் விவரங்களுக்கு 9500165460 என்ற எண்ணில் தொடர்புகொள்ளவும்.