விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’: அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வெப்பினார்

விஐடி சென்னை வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’: அரசு வேலைவாய்ப்பு, உயர்கல்வி வெப்பினார்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், இளங்கலை, முதுகலை பயிலும் கல்லூரி மாணவர்கள் ஆகியோர், நாட்டுக்குச் சேவைபுரியும் வகையில் பல்வேறு அரசுத் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளை அறிந்துகொள்ளச் செய்யும் நோக்கிலும், மருத்துவம், பொறியியல், சட்டம், கட்டடக் கலை ஆகிய உயர் கல்வி தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வகையிலும் விஐடி சென்னை வளாகம் வழங்கும் ‘இந்து தமிழ் திசை - தேசம் காக்கும் நேசப் பணிகள்’ என்ற இணையவழி வெப்பினார் தொடர் நாளை (செப். 23) தொடங்கி, ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களில் மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இந்த நிகழ்வில் கிங் மேக்கர்ஸ் ஐஏஎஸ் அகாடமியும் இணைந்துள்ளது. நிகழ்வின் கலந்துரையாடலை ராணுவ விஞ்ஞானியும், அறிவியல் எழுத்தாளருமான டாக்டர் வி.டில்லிபாபு ஒருங்கிணைத்து நடத்துவதுடன், துறை சார்ந்த வல்லுநர்களுடன் கலந்துரையாடுகிறார்.

இந்த நிகழ்வில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் https://www.htamil.org/DKNP001 என்ற லிங்க்-ல் பதிவு செய்துகொள்ளலாம். மேலும், கூடுதல் விவரங்களுக்கு 9944029700 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in