டெல்லியில் உலக புத்தக காட்சி தொடக்கம்: 35 நாடுகளைச் சேர்ந்த 1000 வெளியீட்டாளர் பங்கேற்பு

டெல்லியில் உலக புத்தக காட்சி தொடக்கம்: 35 நாடுகளைச் சேர்ந்த 1000 வெளியீட்டாளர் பங்கேற்பு
Updated on
1 min read

புதுடெல்லி: தலைநகர் டெல்​லி​யில் தொடங்​கி​யுள்ள உலக புத்தக காட்​சி​யில் 35-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்த 1000-க்​கும் மேற்​பட்ட வெளி​யீட்​டாளர்​கள் பங்​கேற்​றுள்​ளனர்.

உலக புத்​தகக் காட்சி​யில் டெல்​லி​யில் நேற்று தொடங்​கியது. 9 நாட்​கள் நடை​பெறும் இந்​தக் புத்​தகக் காட்சியை மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் தொடங்கி வைத்​தார்.

இதில் ஸ்பெ​யின் கலாச்​சா​ரத் ​துறை அமைச்​சர் எர்​னஸ்ட் உர்​தாசன் டோம்​நெக், இந்​தி​யா​வுக்​கான கத்​தார் தூதர் முகமது ஹாச் அல்​-ஜபிர், கத்​தார் கலாச்​சா​ரத்​துறை அமைச்​சர் ஷேக் அப்​துல் ரகு​மான் ஆகியோர் பங்​கேற்​றனர்.

இந்​திய ராணுவத்​தின் வரலாறு என்ற கருப்​பொருளில் இந்த புத்​தகக் காட்சி டெல்லி பாரத் மண்​டபத்​தில் நடை​பெறுகிறது. இதில் அனு​மதி இலவசம்.

இந்த புத்​தகக் காட்சி​யில் 35-க்​கும் மேற்​பட்ட நாடு​களைச் சேர்ந்த 1000-க்​கும் மேற்​பட்ட வெளி​யீட்​டாளர்​கள் பங்​கேற்​றுள்​ளனர். இந்​திய ராணுவத்​தின் வீரம் மற்​றும் ஞானத்தை போற்​றும் வகை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள அரங்​கில் 500-க்​கும் மேற்​பட்ட புத்​தகங்​கள், போஸ்​டர்​களை டேராடூனில் உள்ள இந்​திய ராணுவ அகாடமி காட்​சிக்கு வைத்​துள்​ளது.

இந்த அரங்​கில் அர்​ஜுன் டேங்க், ஐஎன்​எஸ் விக்​ராந்த் போர்க் கப்பல், தேஜஸ் போர் விமானம் ஆகிய​வற்​றின் மாதிரி​கள் வைக்​கப்​பட்​டுள்​ளன. பரம் வீர் சக்ரா விருது பெற்​றவர்​களுக்கு இங்கு புகழாரம் சூட்​டப்​பட்​டுள்​ளது.

1947-ம் ஆண்டு முதல் ஆபரேஷன் சிந்​தூர் வரை நாடு மேற்​கொண்ட முக்​கிய போர்​கள் பற்​றிய விளக்​கங்​கள் இங்கு அளிக்​கப்​படு​கின்​றன. வந்தே மாதரம் பாடலின் 150-ம் ஆண்டு விழா, சர்​தார் வல்​லப​பாய் படேலின் வாழ்க்கை ஆகிய​வை​யும் இந்த புத்தக காட்சி​யில் இடம் பெற்​றுள்​ளன.

இங்கு 3000-க்​கும் மேற்​பட்ட அரங்​கு​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. சுமார் 600 இலக்​கிய நிகழ்ச்​சிகளும் இங்கு நடை​பெறுகின்​றன. இதில் பேச்​சாளர்​கள், எழுத்​தாளர்​கள், பிரபலங்​கள்​ பலரும்​ பங்​கேற்​கின்​றனர்​.

டெல்லியில் உலக புத்தக காட்சி தொடக்கம்: 35 நாடுகளைச் சேர்ந்த 1000 வெளியீட்டாளர் பங்கேற்பு
மும்பை, நாக்பூரில் 58 பாஜக நிர்வாகிகள் இடைநீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in